Wednesday, January 28, 2009

வானமும் ஜோஷ்யமும்


Earth-Moon-Mars

வானத்தில் எண்ணற்ற ஜொலிக்கும் நட்சத்திரங்களும் கோள்களும் நிரம்பியுள்ளன.
செத்துப்போன நட்சத்திரங்களும் (Dead stars-blackholes) இருப்பதாகவும் ,சில நட்சத்ரங்கள் அவ்வப்போது ஒளியிழந்து blackholes என்னும் நட்சற்றங்களாக செத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்
வானவியல் வல்லுனர்கள்.
நாம் சூரிய குடும்பத்தில் பூமியில் தற்போது வாழ்கிறோம்.

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும்
மானிட வாழ்க்கையுடன் இணைத்து ஜோஷ்யம் என்ற மோசடியை ஜோஷ்யர்கள் என்னும் ஒரு கூட்டம் உலகம் முழுவதும் இந்த கணினி யுகத்திலும் வெகு சாமர்த்தியமாக நன்கு மெத்தப் படித்தவர் படிக்காதவர்கள் என்ற மக்களை மோசடி செய்கிறார்கள்.
தான் பெற்ற
மகளைக் கற்பழித்தால் தந்தையின் வியாபாரம்
தொழில் எதிர் காலத்தில் அமோகமாக அமையும் என்று ஒரு ஜோஷ்யன் சொல்ல அந்த மும்பை வாசி ஒன்பது வருடங்களாக தன் மகளைக் கற்பழித்து வந்துள்ளான். இப்போது சிறையில் உள்ளான்.
நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று அருள் வாக்கு சொல்லி கொலைபாதகத்தைச் செய்ய வைக்கிறார்கள். செவ்வாய் தோஷம் என்று கணித்து பெண்ணுக்குத் திருமணம் நடப்பதில் வேண்டாத தடங்கல்களை உருவாக்கி விடுகிறார்கள்.
எந்த ஒரு ஜோஷ்யருக்காவது தனக்கு எப்போது சாவு ,விபத்து , ஆபத்து நிகழும் என்று சரியாக கணித்துக் கூற முடியுமா?
பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் இந்த ஏமாற்றும்
ஜோஷ்யர்களை கலந்து ஆலோசிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில்லை.
ஏற்கனவே திருமணம் ஆகி குடுபத்துடன் வாழ்க்கை நடத்தி வந்த
அந்தபெரிய ஓட்டல் செல்வந்தரை மேலும் ஒரு திருமணம் செய்தால் எதிர்காலம் அமோகமாக அமையும் என்றுவறான ஆலோசனை கூறி அவரை கொலைக் குற்றவாளியாக்கி விட்டான்.
முன் யோசனை செய்ய வேண்டாமா? இது தேவையா?

ஆப்கன்-பாக் எல்லை பகுதிகளில் தற்போது சமூக அட்டகாசங்களைச்செய்து வரும் தாலிபான்களை விட இந்த ஜோஷ்யர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.
மண்டையில் தேங்காய்
உடைக்கும் பூசாரிகள் ,ஆட்டின் குரல் வளையை கடித்துக் குதறி இரத்தம் குடிக்கும் பூசாரிகள் ,பேய் விரட்டும் மந்திரவாதிகள் ,
குழந்தைகளைக் குழிக்குள் புதைத்து எடுக்கும் அறிவிலிகள் என்று செயல்படும் இந்த இந்திய தாலிபான்கள் நிறைய உலா வருகிறார்கள்.

மக்களே இனியும் ஜோஷ்யர்களின் ஜாதகம் பார்த்துச் சொல்லும்
பலன்களை நம்பி ஏமாந்து உங்களின் மற்றும் உங்கள் குடுபதினரின் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் .உங்கள் சொந்தப் புத்தியை பயன் படுத்துங்கள்.
திருமணம் செய்ய ஜாகத்தைப் பார்க்காதீர்கள் .
குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் கணிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.
மறக்காமல் பிறந்த நேரம்,தேதி ,மாதம் ,ஆண்டு போன்ற
விவரங்களை மற்றும் வேறு முக்கிய மருத்துவக் குறிப்புகள் இருப்பின் அவற்றை குறித்து வைக்கவும். ஜோதிடரைக் கூப்பிட்டு பிறப்பு ஜோதிடம் எழுதி பண மற்றும் கால விரயம் ,குழப்பம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
ஜோஷ்யர்களின் கணிப்புப்படி நடந்த எத்தனை திருமணங்கள்
துன்பத்தில் முடிந்துள்ளன .கொஞ்சம் ,சிந்தியுங்கள் மக்களே !

தேர்தல் காலங்களில் பேராசையும் சுயநலமும் கொண்ட
அரசியல்வாதிகள் ஜோதிடர்களைச் சுழ்ந்து கொள்கிறார்கள். ஹோமங்கள்,யாகங்கள், பூஜைகள் என்று பல லட்சம் பணம்
செலவு செய்து தங்களது வெற்றிக்காக படாத பாடு படுகிறார்கள்.
கேரளா நம்பூதிரிகள் பெரும்பாலோர்கள் இதில் தேர்ந்தவர்கள்.
பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் ஜோதிடம் கேட்டுத் தான்
அரசியல் செய்கிறார்கள். கொள்ளையடித்துச் சம்பாதித்த பணத்தை ஜோதிடர்களுக்கும் வாக்காளர்களுக்கும் எவ்வளவு பணம்
வேண்டுமானாலும் கொடுத்து தங்களது வெற்றிக்காக படாத பாடு படுகிறார்கள்.மக்களும் பணம், பொருள் பெற்றுக் கொண்டு
வாக்குரிமையைத் தவறாக பயன் படுத்த துணிந்து விட்டார்கள்!
நாட்டை இப்போது ஆள்வது ஜனநாயகம் அல்ல ,பண நாயகம் தான்.
பத்திரிக்கைகளும் ,வார,மாத இதள்களும் தங்கள் பங்க்குக்கு
தினப்பலன்,வாரப்பலன்,மாதப்பலன்,ஆண்டுப்பலன்கள் மற்றும்
பிறந்தநாள் பலன்கள் என்று மக்களை மடையர்கள் போல
ஆக்கி விட்டார்கள்.
ஜோதிட நிலையங்கள் இப்போது எக்கச்சக்கமாக பெருகி
விட்டன. சந்திராயன் நிலவை ஆராய்ச்சி செய்து வந்த போதிலும்
ஜோதிடரை மக்கள் நம்புவதைக் கை விட்ட பாடில்லை.
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்களது கொட்டம் தொடரும்


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கை ரேகை பார்த்துப் பலன்
சொல்லி ஏமாற்றி வந்தார்கள். அப்புறம் கிளி ஜோஷ்யம்,
எலி ஜோஷ்யம் இவைகளும்
.மௌசு இழந்து குறைந்து விட்டன.
நாடி ஜோஷ்யம், ஏடு படித்து சொல்லும் ஜோஷ்யமும் மெல்ல
குறைந்து
வருகின்றன, எல்லா எளவு ஜோஷ்ய மூட நம்பிக்கைகள்
அறவே
நீங்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும் போலத் தெரிகிறது.
காத்திருப்போம்.
அட்சய திரிதியை என்ற பேரால் வியாபாரிகள் மோசடி வியாபாரம்
செய்து மக்களை மடையர்களாக்குகிறார்கள்.
இப்போது தங்கள் தங்கள் சாதி என்றும் குல தெய்வ கோவில்கள்
என்றும் போட்டி போட்டுக் கொண்டு கோவில்களுக்கு சுற்றுச்
சுவர்கள் கட்டுவது ,கோபுரங்கள் கட்டுவது ,கலசங்கள் அமைப்பது
என்று பல லட்ச ரூபாய்கள் வசூல் செய்து போர்க்கால அடிப்படையில்
மிக மிக தீவிரமாக ஈடு பட்டுள்ளார்கள். பிறகு கும்பாபிஷேகம்
செய்கிறார்கள்.இதற்க்கு பல அர்ச்சகர்கள் லட்சக் கணக்கில் கட்டணம்
வாங்குகிறார்கள்.அக்னி குண்டத்தில் நெய் மற்றும் சுள்ளிகள் மூலம்
தீ வளர்த்து தானியங்கள் ,வஸ்திரங்கள் என்று ஏகப் பட்ட பொருள்களை
தீயில் எரிக்கிறார்கள்.
அர்ச்சகர்கள் காரில் செல் போன் சகிதம் வந்து
செல்கிறார்கள்.ஒலி பெருக்கியில் மைக் மூலம் சமஸ்கிருத சுலோகங்கள்
கத்தப் பட்டு காதை செவுடாக்குகின்றனர். இதோடு மண்டல பூஜை
என்று 48 நாட்கள் நடத்தப் பட்டு ,அர்ச்சகர்களுக்கு அனுதினமும் பணம்
கொட்டுகிறது.
இந்த மதி கெட்டவர்கள் எப்போது திருந்துவார்கள்?

மூடர்கள் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் மூட நம்பிக்கைகளை நிச்சயமாக ஒழிக்க முடியாது.ஆகவே நான் மூடநம்பிக்கை ஒழிப்பு அனேகமாக சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.

கீழேகாணும் தினமலர் செய்தி படியுங்கள் பின் யோசியுங்கள்-       07-06 -2010

கோவை : மாங்கல்ய தோஷம் தீர்ப்பதாகக் கூறி, பூஜையில் வைத்த 35 சவரன் நகையுடன் தப்பிய போலி பூசாரியை போலீசார் தேடுகின்றனர். கோவை, கணபதி செக்கான்தோட்டத்தைச் சேர்ந்தவர் ரோகித்குமார்(40). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாங்கல்யதோஷம், திருமணத்தடை ஆகியவற்றை நீக்குவதாகக் கூறி சிறப்பு பூஜை நடத்தி வந்தார். இரு நாட்களுக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த ராதா, ரேவதி ஆகியோர் பூசாரியை சந்தித்தனர். அவர்களிடம் மாங்கல்யதோஷம் இருப்பதாக்கூறி, அதை நிவர்த்தி செய்ய வீட்டில் இருக்கும் நகை அனைத்தையும் கொண்டு வந்து பூஜையில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மாங்கல்ய தோஷம் நீங்கி, வாழ்க்கை சிறப்படையும் என தெரிவித்துள்ளார்.

பூசாரி சொன்னதை உண்மை என நம்பிய பெண்கள், வீட்டில் இருந்த 35 சவரன் நகையை கொண்டு வந்து, பூசாரி கொடுத்த சிறிய பெட்டியில் வைத்துக் கொடுத்தனர். சிறிது நேர பூஜைக்குப்பின் பெட்டியை மூடி,பெண்களிடம் கொடுத்த பூசாரி," இதை திறக்காமல் நாளை வரை வீட்டு பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை பூஜை செய்தால் தோஷம் நீங்கும்,' எனக்கூறி அடுத்த நாள் பூஜையில் கலந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.

பூசாரி கூறியபடி, பெட்டியை திறக்காமல் பூஜை அறையில் வைத்த பெண்கள் அடுத்த நாள், பூசாரியை அவரது வீட்டில் சந்தித்து பெட்டியை கொடுத்தனர். பெட்டியை வாங்கிய பூசாரி, அவர்களது கையில் கைப்பிடி அரிசியை கொடுத்து," கீழே விழாமல் அரிசியை எண்ண வேண்டும். ஒரு அரிசி விழுந்தாலும் ஆபத்தில் முடிந்து விடும்' என எச்சரித்தார். அரிசி கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில், ஒட்டுமொத்த சிந்தனையை அரிசி எண்ணுவதில் செலுத்தினர். இச்சமயத்தில் நகைப்பெட்டியை மாற்றிய பூசாரி, அதே வடிவம் கொண்ட வேறு ஒரு பெட்டியை கொடுத்து,"நாளைக் காலை நல்ல நேரத்தில் பெட்டியை திறக்க வேண்டும்' எனக் கூறி அனுப்பி வைத்தார்.

நேற்று காலை பெண்கள் இருவரும் பெட்டியை திறந்தபோது, உள்ளே நகைகள் காணாமல் போயிருந்தது. எலுமிச்சையும், அரிசி மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாமியார் வீட்டுக்குச் சென்றபோது, பூசாரி முதல் நாள் இரவே வீட்டை காலி செய்து"எஸ்கேப்' ஆகி விட்டார். நகையை பறிகொடுத்த பெண்கள், போலீசில் புகார் கொடுத்தனர். ரத்தினபுரி போலீசார், நகையுடன் தப்பிய போலி பூசாரியை தேடுகின்றனர்.

இப்போதும் வைத்தீஸ்வரன் கோயில் நாடி /ஏடு ஜோஷ்யம் தொடரத்தான் செய்கிறது. 

No comments:

Post a Comment

Followers

Blog Archive

About Me

My photo

I am a retired Sub-Divisional Engineer-Bharat Sanchar Nigam Limited, INDIA. I served ten years in the Indian Army in technical wing - EME -(Electrical & Mechanical Engineers).I was Telecommunication mechanic(1959 - 1969).I underwent electronics & military communication equipment (telephone/wireless) training at Secunderabad (1959-1961).Served at J & K area, Jamanagar-Gujarat including Indo-Pak war-1965.Released on own request discharge in the year 1969, I joined Indian P & T deptt. in the year 1969 & retired as SDE in the year 2001.My hobby: Computer, Internet, Multimedia.